1. Home
  2. தமிழ்நாடு

ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை..!

1

ரயில்களில் பயணத்தின் போது ஆபத்தை விளைவிக்கும் பட்டாசுகள், வெடிப் பொருட்கள், மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், சிலிண்டர் போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. மீறுபவர்கள் மீது ரயில்வே சட்டப்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். சில நேரங்களில் இரண்டும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நாளை (அக்.17) முதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ், எழும்பூர் - மதுரை முன்பதிவில்லா MEMU எக்ஸ்பிரஸ். நாளை மறுநாள்- மதுரை - தாம்பரம் முன்பதிவில்லா MEMU எக்ஸ்பிரஸ், எழும்பூர் - மதுரை முன்பதிவில்லா MEMU எக்ஸ்பிரஸ். அக்.20ல் செங்கோட்டை - தாம்பரம் எக்ஸ்பிரஸ், அக்.21ல் மதுரை - தாம்பரம் முன்பதிவில்லா MEMU எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களுக்கான முன்பதிவு சற்றுமுன் தொடங்கியுள்ளது.

Trending News

Latest News

You May Like