பர்ஸை பறிக்க முயன்ற 3 திருடர்கள்… விடாமல் போராடிய இளம்பெண்!
பைக்கில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடர்களுடன் ஓர் இளம்பெண் வீரத்துடன் போராடிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பட்டின்டா மாவட்டம் ராம்புரா பால் நகரில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வேகமாக வந்த மூன்று பேர் அவரது பர்ஸை பறிக்க முயற்சி செய்தார்கள்.
அந்தப் பெண் கீழே விழுந்து விடுகிறார். அவரை மீண்டும் தாக்கி பறிக்க பர்ஸை முயற்சிக்கிறார்கள். அதிலிருந்து தப்பிக்கும் அந்தப் பெண், திருடர்களை விரட்டிச்சென்றார்.
அவர்களில் இருவரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பைக்கில் திருடர்கள் வருவதை அறியாமல் நடந்து சென்று கொண்டிருந்த அப்பெண், திருடர்கள் எவ்வளவோ இழுத்தும் பர்ஸை விடவில்லை.
அந்த பர்ஸில் டியூசன் மையத்துக்குச் செலுத்தவேண்டிய ரூ.15 ஆயிரம் பணமும் இருந்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
அந்த பெண் திருடர்களுடன் போராடி கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள், அவர்களில் இருவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
newstm.in