1. Home
  2. தமிழ்நாடு

இன்னும் 3 நாட்களுக்கு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

இன்னும் 3 நாட்களுக்கு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!


‘தமிழகத்தில் இன்னும் மூன்று நாட்களுக்கு கன மழை இல்லை; வறண்ட வானிலையுடன் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: ‘வடகிழக்கு பருவக்காற்று மிதமாக உள்ளது. எனவே, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கே வாய்ப்பு உள்ளது.

இன்று (10ம் தேதி) காலை வரை மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யும். பின், 8:30 மணி முதல் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

வடக்கு உள் மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். நாளை (11ம் தேதி), தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். வரும் 12 மற்றும் 13ம் தேதிகளில் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 31; குறைந்தபட்சம், 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

நேற்று (9ம் தேதி) காலை நிலவரப்படி, கும்பகோணத்தில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சத்யபாமா பல்கலை, திருவிடைமருதூர் பகுதியில் தலா 2 செ.மீ மழையும், மஞ்சளாறு, வலங்கைமான், தொண்டி, புதுச்சேரியில் 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like