மகாராஷ்டிராவில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்து: 3 பேர் பலி..!
புனே மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 2) காலை வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விழுந்தது. இதில் இரண்டு விமானிகள் மற்றும் பொறியாளர் ஒருவர் என மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து புனே மாவட்டத்தில் உள்ள மலைகள் சூழ்ந்த பவுதான் புத்ருக் என்ற பகுதியில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் காலை நடைபெற்றுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விழுந்தவுடன் தீ பிடித்து எரிந்தது. இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் அங்கு விரைந்தனர். பின்னர் மூன்று பேர் உயிரிழந்ததை போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹெலிகாப்டர் டெல்லியைச் சேர்ந்த விமான நிறுவனத்துக்கு சொந்தமானது என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.