களைகட்டிய அம்பானி வீட்டுத் திருமணம்!3 ஜெட் விமானங்கள், 100க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள்..!
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் இன்று மும்பையில் நடைபெறவுள்ளது. அம்பானி இல்லத் திருமண விழாவினை மறக்க முடியாத விழாவாக ஆக்குவதற்காக ஏகப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த திருமண விழாவிற்கு வரும் விருந்தினர்களை அழைத்து செல்ல 3 பால்கன் -2000 ஜெட் விமானங்களை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், மேலும் 100க்கும் மேற்பட்ட தனியார் விமானங்களும் நிகழ்ச்சியில் அம்பானி குடும்பத்தினர் வாடகைக்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்று மும்பை ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் நடைபெறவுள்ளது.இதற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பிரபலங்கள் வரவுள்ளதால், அவர்களுக்கு ஐந்து நட்சத்திர விடுதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருமணத்திற்கான தயாரிப்புகள் முழு வீச்சில் நடந்துவந்த நிலையில், குஜராத்தி திருமணங்களின் முக்கிய நிகழ்வான மாமேரு சடங்கு, முகேஷ் அம்பானியின் இல்லமான ஆன்டிலியாவில் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. மாமேரு சடங்கு என்பது மணமகளை அவரது தாய் மாமன் சீர்வரிசையுடன் சந்திக்கும் நிகழ்வாகும். இதன் தொடர்ச்சியாக, கிரஹ சாந்தி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வை மணமகள் ராதிகா மெர்ச்சன்ட்-ன் குடும்பத்தினர் நடத்தினர். அதன்பின்னர், ஷிவ ஷக்தி பூஜையும் அனந்த்-ராதிகா திருமணத்தையொட்டி நடைபெற்றது.
திருமண நிகழ்வில் கலந்துகொள்ளும் பல துறை சார்ந்த பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், முன்னாள் குடியரத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முதல்வர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் தொடங்கி முன்னாள் இங்கிலாந்து பிரதமர்கள் உள்ளிட்ட சர்வதேச விருந்தினர்கள் வரை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
.png)