ஒரே நாளில் கோடீஸ்வரர்களான 3 மீனவர்கள்..!
இந்த கடற்பகுதியில் மட்டும் சில அரியவகை மீன்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, கோல் என்ற மீன் வகை காணப்படுகிறது. ஆனால், இது மீனவர்களின் வலையில் சிக்குவது என்பது அரிதானது.
இந்த வகை மீன்களுக்கு ஜப்பான் மற்றும் சீனாவில் மிகுந்த சந்தை வரவேற்பு இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல், இந்த வகை மீன்கள் எங்கு சென்றாலும், அதன் இனப்பெருக்க காலத்தில் ஒரே இடத்தில் தான் குழுமி இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.
கடல் மட்டத்தில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் இந்த கோல் வகை மீன்களை பிடிக்க ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இப்படிப்பட்ட அரிய கோல் வகை மீன்கள், தற்போது தத்தி என்ற கிராமத்தில் உள்ள 3 மீனவர்களுக்கு கிடைத்துள்ளது. இதன்படி, நிகில் தமோர் என்ற மீனவருக்கு 130 மீன்களும், ஆனந்த் என்ற மீனவருக்கு 88 மீன்களும், 17 மீன்கள் துஷார் என்பவரது வலையிலும் பிடிபட்டுள்ளது.
இவ்வாறாக பிடிபட்ட 235 கோல் வகை மீன்களும் கோடிக்கணக்கில் விலை போயுள்ளது. இதனால் தத்தி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மூவரும் ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.
பீர் உற்பத்தி மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட தயாரிப்பில் பயன்படும் இந்த கோல் வகை மீன் 1 கிலோ 15 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டு 130 கோல் மீன்களைப் பிடித்த மீனவர் ஒருவர் ஒரே நாளில் 1.30 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.