3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை..!

தமிழ்நாட்டில் வருகின்ற 19-ஆம் தேதி மக்களவை தேர்தல் வருவதை முன்னிட்டு தமிழகத்தில் தொடர்ந்து காவல் துறையினர்கள் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதனால் தமிழகத்தில் தாெடர்ந்து பல கெடுபிடிகள் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் 17-தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள டாஸ்மார்க் கடைகள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ஆம் தேதியும் தமிழகத்தில் டாஸ்மாக் மூடப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் உள்ள மது பிரியர்களை கவலையடைய செய்துள்ளது என்றே கூறலாம்.
ஆனால் குடிமகன்கள் தங்களுக்கு தேவையான மதுப்பாட்டில்களை முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்வார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தலுக்கு முதல் மூன்று நாட்கள் எவ்வித அசாம்பாவிதங்களும் நடக்க கூடாது என்பதற்காகவும், அதே சமயம் உத்தரவை மீறி செயல்படும் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.