1. Home
  2. தமிழ்நாடு

இனி சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை..!

1

கடந்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய ஷாக்சியா, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டன.

இந்தச் சட்டங்கள் குற்றவியல் நீதி அமைப்பை சரி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அத்துடன் காலனி ஆதிக்க காலகுறியீடுகளை மாற்றி அமைக்கும்வகையிலும் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த புதிய 3 குற்றவியல் சட்ட மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. குடியரசுத் தலைவரும் இந்த புதிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார்.இந்நிலையில், 3 புதிய குற்றவியல் சட்டங்கள், வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்தது.

1. இந்திய தண்டனைச் சட்டத்துக்கு (Indian Penal Code IPC- ஐபிசி) மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, 2023

2. குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்குப் ( Criminal Procedure Code- CRPC சிஆர்பிசி) பதிலாக பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா

3. இந்திய ஆதாரச் சட்டம், 1872-க்கு மாற்றாக (Indian Evidence Act, 1872- ஆதார சட்டம்) பாரதிய சாக்ஷய சட்டங்கள் இருக்கும்.
 

பாரதிய நியாய சன்ஹிதா : 

இந்த சட்டத்தில் தேசத்துரோகம் என்பது நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு மாற்றாக நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பிரிவினைவாதம், கிளர்ச்சி ஆகியவற்றுக்கு எதிராக தண்டனை வழங்கும் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. கும்பலாக சேர்ந்து கொலை செய்தல், வன்கொடுமை செய்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட்ட 7 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மேற்சொன்ன குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.மேலும் சமூக சேவையை தண்டனையாக வழங்குவது பற்றி வரையறை செய்துள்ளது. அதன்படி, ஒரு குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்படும் போது அது சமூகத்திற்கு நன்மை அளிக்கும் வகையில் இருக்கும். சிறிய அளவிலான திருட்டு, குடி போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு சமூக சேவை செய்யும் வகையில் உத்தரவிடப்படும். மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் செய்யும் குற்றங்களில் மன நோய் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது குழப்பமான மனம் என்ற சொல்லாடலாக மாற்றப்பட்டுள்ளது.

பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா 

குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும். மேலும் வாதங்களும் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். வழக்கு விசாரணை முடிந்ததும் 30 நாட்களில் தீர்ப்பு வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் நபர்களின் வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

பாரதிய சாக்‌ஷியா அதினியம்

டிஜிட்டல் மயமாக்கம் செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வழக்கு ஆவணங்கள், எஃப்.ஐ.ஆர், குற்றப்பத்திரிகை, தீர்ப்புகள் ஆகியவை அவ்வப்போது டிஜிட்டலில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நீதிமன்றங்களில் சமர்பிக்கப்படும் சாட்சியங்களில் டிஜிட்டல் ஆவணங்கள், இ-மெயில், சர்வர் பதிவுகள், கணினி, எஸ்.எம்.எஸ், வெப்சைட், சான்றுகள், அஞ்சல்கள் உள்ளிட்டவை ஏற்றுக் கொள்ளப்படும்.


3 குற்றவியல் சட்டங்களில் முக்கிய அம்சங்கள் என்ன?: இனி காவல் நிலையத்துக்கு சென்றுதான் புகார் தர வேண்டும் என்பது இல்லை. மின்னணு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவே புகார் தர முடியும். எந்த் ஒரு காவல் நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யலாம். பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய கால அவகாசம் 90 நாட்கள். விசாரணையை முடிக்க வேண்டிய நாட்கள் 180. விசாரணை முடிவடைந்த 30 நாட்களில் தீர்ப்பு வழங்க வேண்டும். சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கப்படும்.

 

Trending News

Latest News

You May Like