1. Home
  2. தமிழ்நாடு

தயார் நிலையில் 3 கொரோனா மருந்துகள்! மக்களுக்கு வழங்கும் திட்டம் வகுக்க மோடி உத்தரவு!!

தயார் நிலையில் 3 கொரோனா மருந்துகள்! மக்களுக்கு வழங்கும் திட்டம் வகுக்க மோடி உத்தரவு!!


கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை மாநில அரசுகளுடன் இணைந்து வகுக்குமாறு நிபுணர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 3 கொரோனா மருந்துகளின் ஆய்வுகள் முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதாகவும், ஒரு மருந்தின் பரிசோதனை இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்துகளை பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கான முன்னேற்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் செய்து வருகிறது. இதற்கான திட்டங்களை வகுக்க, தேசிய நிபுணர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று சூழல், தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள், அவற்றின் விநியோகம் மற்றும் நிர்வாகம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

தயார் நிலையில் 3 கொரோனா மருந்துகள்! மக்களுக்கு வழங்கும் திட்டம் வகுக்க மோடி உத்தரவு!!

அப்போது பேசிய அவர், மருந்து குப்பிகள், சிரிஞ்சுகள் உள்ளிட்ட தேவைப்படும் அனைத்து துணை கருவிகளையும் தயார் செய்தல் மற்றும் ஆகியவற்றுக்கான திட்டமிடலை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதில், தேவையான அமைப்புகளின் வல்லுநர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொது சமூக அமைப்புகள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாநில அளவிலான நிர்வாகிகள் ஆகியோரை ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like