தமிழகத்தில் மேலும் 3 கோவில்களில் முழுநேர அன்னதானம்!!
தமிழகத்தில் மேலும் 3 கோவில்களில் முழுநேர அன்னதான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள சில குறிப்பிட்ட கோவில்களில் முழுநேர அன்னதான திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன்படி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், திருவரங்கம் அரங்கநாதசுவாமி கோவில், திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ழுழுநேர அன்னதான திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேலும் 3 கோவில்களில முழுநேர அன்னதான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்.
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் போன்ற கோவில்களில் முழுநேர அன்னதான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
newstm.in