1. Home
  2. தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்!!

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்!!

இலங்கைப் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைப் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த கற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்து நேற்று நள்ளிரவு முதல் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மன்னர் வளைகுடா பகுதியில் நிலவுகிறது.


அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்!!



இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலு விழக்கக்கூடும். இதன் காரணமாக இன்று தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like