சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்.. 3 மாணவிகள் ஆற்றில் மூழ்கி பலி..!
ஆந்திராவில், பள்ளியில் இருந்து சுற்றுலா சென்ற மூன்று மாணவிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களுடன் சிந்தூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது சகிலேறு ஆற்றில் கும்மாடி ஜெய ஸ்ரீ(14), சுவர்ண கமலா(14), கீதாஞ்சலி(14) ஆகிய மூன்று மாணவிகள் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகளைத் தேடத் தொடங்கினர். நீண்ட நேர தேடலுக்குப் பின்னர் இரண்டு மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மற்றொரு மாணவியின் உடலை தேடி வருகின்றனர்.