1. Home
  2. தமிழ்நாடு

பெற்றோர்களின் சிறு கவனக்குறைவால் வாளி தண்ணீரில் மூழ்கிய 2 வயது குழந்தை..!

1

காட்பாடியை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகள் ரேச்சல் (2). நேற்று மாலை ரேச்சிலின் தாய் வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார். சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிகொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே வாளியில் இருந்த தண்ணீரில் சிறுமி விளையாடினார்.

baby

அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி தவறி வாளியில் உள்ள தண்ணீரில் விழுந்தார். இதில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக ரேச்சல் இறந்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுமியின் தாய் குழந்தை வாளியில் உள்ள தண்ணீரில் மூழ்கிக் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக குழந்தையை மீட்டு பார்த்தபோது மகள் ரேச்சல் இறந்து கிடந்தது தெரிய வந்தது. மகளின் உடலை பார்த்து தாய் கதறி துடித்தார். இந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. இது குறித்து திருவலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Thiruvalam PS

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவலம் போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகதைத ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like