1. Home
  2. தமிழ்நாடு

நாளை 2ம் கட்ட வாக்குபதிவு! களை கட்டும் பீகார் தேர்தல்!

நாளை 2ம் கட்ட வாக்குபதிவு! களை கட்டும் பீகார் தேர்தல்!


பீகார் சட்டசபை தேர்தலில் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், 2-ம் கட்ட வாக்குபதிவு நாளை நடைபெறுகிறது.

பீகார் மாநிலத்தில் உள்ள 243 சட்ட சபைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

நாளை 2ம் கட்ட வாக்குபதிவு! களை கட்டும் பீகார் தேர்தல்!

பீகார் சட்டசபை தேர்தலில் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், 2-வது கட்டத் தேர்தல் நவம்பர் 3- ம் தேதியும், 3-வது கட்டத் தேர்தல் நவம்பர் 7- ம் தேதியும் நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் நவம்பர் 10- ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படவுள்ளது.

பீகார் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி மற்றும் பா.ஜ.க கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.கொடிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு செய்யும் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இந்த நிலையில், 2-ம் கட்ட வாக்குபதிவு நாளை நடைபெற உள்ளது. கொரோனா பொதுமுடக்கம் நிலவி வரும் நிலையில், நாட்டில் முதல்முறையாக இந்த தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like