1. Home
  2. தமிழ்நாடு

மதிமுக மாவட்ட செயலாளர் நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 28 பேர் கூண்டோடு ராஜினாமா..!!

1

மதிமுகவில் வைகோவின் மகன் துரை வைகோவை  முன்னிலைப்படுத்தி கட்சியை வழிநடத்துவதாக மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  இந்த சூழலில் மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவில் இணைத்து விடலாம், இனி கட்சி தேறாது என்று வைகோவிற்கு மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி சமீபத்தில் எழுதிய கடிதம் பரபரப்பு கிளப்பியது. ஆனால் இதைக் கண்டு கொள்ளாத வைகோ சிலவற்றை நாங்கள் நிராகரிக்கிறோம் ஜனநாயக முறைப்படி கட்சியை நடத்துகிறோம் என்று பதிலளித்திருந்தார். இந்த சூழலில் மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்டு அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்திருந்தார்.

இதனையடுத்து மதிமுக உட்கட்சி தேர்தல் வருகிற ஜூன் 14-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் மதிமுக பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் தேர்வானார். அண்மையில் மதிமுகவின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மார்கோனி அக்கட்சியில் இருந்து அதிரடி நீக்கப்படுவதாக வைகோ அறிவித்தது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிமுக கவுன்சிலர்கள் உதவியுடன், தன் தாயாரை நகராட்சி தலைவராக்க மார்கோனி திட்டமிட்டதாக கூறி அவரை கட்சியிலிருந்து நீக்கினார் வைகோ.

article_image1

இந்நிலையில் சீர்காழியில் மதிமுக மாவட்ட செயலாளர் மார்கோனி நீக்கம் செய்யப்பட்டதற்கு, எதிர்ப்பு தெரிவித்து 28 பேர் கூண்டோடு ராஜினாமா செய்தனர். மார்கோனி தலைமையில் மதிமுக பொறுப்பாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர்.

Trending News

Latest News

You May Like