28 மின்சார ரயில் சேவை இன்று முதல் தற்காலிகமாக ரத்து..!
கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு நாள்தோறும் அதிகாலை 3.50 மணி முதல் இரவு 11.59 மணிவரை 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
பீக் அவர் எனப்படும் காலை, மாலை நேரங்களில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 20 முதல் 25 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரண்டு மார்க்கமாகவும் இன்று முதல் 28 மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப, ரயில்வே அட்டவணையையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் புதிய அட்டவணைக்கு ஏற்பத் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.