1. Home
  2. தமிழ்நாடு

வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார்..!!

வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார்..!!

தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது. எனவே அதற்கு பதிலாக சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ராஜபாதை (கடமைப் பாதை) சீரமைப்பு பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஓர் அங்கமாக பாராளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது.

டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டி வருகிறது. பாராளுமன்ற புதிய கட்டிடத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இந்த நிலையில் பாராளுமன்ற புதிய கட்டிடம் வருகிற 28-ந்தேதி திறக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்துள்ளன. பாராளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

Trending News

Latest News

You May Like