278 கிலோ கெட்டுப்போன பேரீச்சம்பழம்..! பிளிப்கார்ட் சொல்வதென்ன..?
கோவையை அடுத்த ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் flipkart நிறுவனத்துக்குச் சொந்தமான இ-காமர்ஸ் கிடங்கு செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் அனைத்தும் இந்த குடோனுக்கு கொண்டு வரப்பட்டு இங்கிருந்து கோவை மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள பிளிப்கார்ட் கிடங்கிலும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த கிடங்கில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருள்கள் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளதா, தரமற்ற பொருள்கள் விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், காலாவதியான பேரிட்சம் பழங்கள் அப்புறபடுத்துவதற்காக தனியாக பிரித்து வைக்கப்பட்டு இருந்த்தாகவும், அவை விற்பனைக்கு உட்படுத்தப்படவில்லை என பிளிப்கார்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், Flipkart நிறுவனக் கிடங்குகளில் உணவுப் பொருள்கள் பாதுகாப்பாக உயர்ந்த தரத்துடன் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் உள்ள எங்கள் மையங்களில் நடத்தப்படும் வழக்கமான உணவு பாதுகாப்பு தணிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்கிறோம். காலாவதியான பொருட்களை வழக்கமான தரச் சோதனை செய்து அதை தனியாக அடையாளம் காணப்பட்டு, அதை அகற்றுவதற்காக தனியாக பிரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பொருள்கள் விற்பனைக்கு உட்படுத்தப்படவில்லை. தரமான பொருட்கள் வாடிக்கையாளர்களை சென்றடைவதை flipkart நிறுவனம் உறுதி செய்கிறது. வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் பொருள் தரம் முதன்மையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.