1. Home
  2. தமிழ்நாடு

கார்த்திகை தீப திருவிழாவுக்கு 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

கார்த்திகை தீப திருவிழாவுக்கு 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, டிசம்பர் 6ஆம் தேதி மகாதீப பெருவிழா நடைபெற உள்ளது.

தீபத்திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால், அவர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.

டிசம்பர் 6ஆம் தேதி மட்டும் 25 லட்சம் பக்தர்களும், மகா தேரோட்டத்தின் போது 5 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டிசம்பர் 7ஆம் தேதி பொளர்ணமி என்பதால், போக்குவரத்துறை சிறப்பு பேருந்துகளை டிசம்பர் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் இயக்க திட்டமிட்டுள்ளது.


கார்த்திகை தீப திருவிழாவுக்கு 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

பொதுமக்களின் வருகையை பொருத்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலில் பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிப்பிடம், உணவு போன்றவற்றிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

அன்னதானம் அளிக்க விரும்புவோர் மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கும் இடங்கள் மற்றும் சொந்த இடங்களில் மட்டுமே அன்னதானம் செய்ய வேண்டும் என்றும், இதற்கு வரும் 26 ஆம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like