1. Home
  2. தமிழ்நாடு

நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 27 பேர் டெபாசிட்டை இழந்தனர்..!

1

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி மரணம் அடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10-ம்தேதி நடைபெற்றது.

நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. இதற்காக வாக்கு எண்ணிக்கை மையத்தில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேஜை ஒன்றுக்கு ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் பணியில் இருப்பர். அஞ்சல் வாக்கு எண்ணிக்கைக்கு 2 மேஜைகள்அமைக்கப்பட்டிருந்தன. மொத்தமாக 150 பேர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இறுதியாக வெளியாகி உள்ள முடிவுகளின்படி, தி.மு.க. 1 லட்சத்து 24 ஆயிரத்து 053 வாக்குகளும், பா.ம.க. 56 ஆயிரத்து 296 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி 10 ஆயிரத்து 602 வாக்குகளும் பெற்றன.  

இதன்படி தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அன்புமணி, 56 ஆயிரத்து 296 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றதுடன் டெபாசிட்டை தக்க வைத்துக்கொண்டார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அபிநயா 10,602 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். மேலும் நாம் தமிழர் கட்சி உள்பட 27 வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர். 

Trending News

Latest News

You May Like