நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உட்பட 27 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்..!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
தபால் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 10 வாக்குகள் கிடைத்துள்ளன. நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 2 வாக்குகள் பெற்றார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 1,23,095 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் சி. அன்புமணி 56,030 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,009 வாக்குகள் பெற்றுள்ளார்.விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உட்பட 27 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.