இடைத்தேர்தல் தொடர்பாக வரும் 27-ம் தேதி நல்ல முடிவை அறிவிப்பேன் - டிடிவி தினகரன்

சென்னையில் உள்ள அ.ம.மு.க. தலைமை அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி நிர்வாகிகளுடன் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிட வேண்டும் என விரும்புகிறோம். நானும் கூட போட்டியிடலாம், தேர்தலில் நிற்பது எனக்கு பயமில்லை. இந்த முறை இடைத்தேர்தலில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் நிர்வாகிகள் உள்ளனர். தொண்டர்களும் அப்படி தான் உள்ளனர். தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதற்காக சில நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்.
வரும் 27-ம் தேதி நல்ல செய்தியை அறிவிக்கிறோம். தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று உறுதியாக உள்ளோம். அதே நேரத்தில் அ.ம.மு.க. போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.