1. Home
  2. தமிழ்நாடு

சென்னைக்கு கடத்திவரப்பட்ட 2,600 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்..!

1

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்திக் கொண்டுவரப்பட்ட 2,600 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த பயணியை கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் கடத்தி வரப்பட்ட நட்சத்திர ஆமைகளை மீண்டும் மலேசியா நாட்டிற்கு திருப்பி அனுப்ப சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் அதற்கான செலவுகள் அனைத்தையும் கடத்திக் கொண்டு வந்த பயணியிடமே வசூலிக்க அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வகை சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள், குளிர் பிரதேசமான தாய்லாந்து, மலேசியா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட இடங்களில் அதிகமாக காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like