1. Home
  2. தமிழ்நாடு

பக்தர்கள் சென்ற டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து 26 பேர் பலி!!

பக்தர்கள் சென்ற டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து 26 பேர் பலி!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் யாத்திரைக்கு வந்த பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர்.

உன்னாவ் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி கோயிலுக்கு கான்பூரின் கதம்பூர் பகுதியில் இருந்து 50 பக்தர்கள் டிராக்டர் - ட்ராலியில் பயணம் செய்தனர். நேற்று கோயிலில் இருந்து திரும்பி வந்த கொண்டிருந்த போது, பாஹாதுனா கிராமத்தின் அருகே உள்ள குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு, மீதமுள்ள நபர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 11 குழந்தைகள் மற்றும் 11 பெண்கள் எனத் தெரியவந்துள்ளது.


பக்தர்கள் சென்ற டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து 26 பேர் பலி!!


விபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்த ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கும் ரூ.50,000 நிதியுதவி வழங்கவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.


அதேபோல், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், டிராக்டரை விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like