1. Home
  2. தமிழ்நாடு

முதலமைச்சருக்கு ரூ.25,000 அபராதம் விதித்த நீதிமன்றம்!!

முதலமைச்சருக்கு ரூ.25,000 அபராதம் விதித்த நீதிமன்றம்!!

பிரதமர் மோடியின் கல்லூரி பட்டப்படிப்பு விவரங்களை வெளியிடக்கோரிய வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி தகுதி குறித்து அறிந்து கொள்ள, அவர் பட்டம் பெற்றதாக கூறப்படும் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கோரியிருந்தார்.

கேட்கப்பட்ட தகவல் 3ஆம் தரப்பினருடையது எனக்கூறி, அதை அளிக்க டெல்லி மற்றும் குஜராத் பல்கலைக்கழக அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து, மத்திய தகவல் ஆணையத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார்.


முதலமைச்சருக்கு ரூ.25,000 அபராதம் விதித்த நீதிமன்றம்!!

கேட்கப்பட்ட தகவல்கள் பொதுவெளியின்கீழ் வருகிறது, எனவே தகவல்களை வழங்குமாறு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது.

வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பிரதமர் மோடியின் கல்வி விவரங்களை வெளியிட அவசியமில்லை என்று குஜராத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like