1. Home
  2. தமிழ்நாடு

25 வயதில் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதியான பட்டியலின பெண்!!

25 வயதில் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதியான பட்டியலின பெண்!!

கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கு ஆன்லைனில் நேரடி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் கோலார் மாவட்டம் பங்காருபேட்டையை சேர்ந்த நாராயணசாமி - வெங்கடலட்சுமி தம்பதியின் 25 வயது மகள் காயத்ரி கலந்துகொண்டு தேர்வு எழுதினார்.

இதைத் தொடர்ந்து சிவில் நீதிபதி பதவி இடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் காயத்ரி தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து விரைவில் அவர் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் சிவில் நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.



25 வயதில் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதியான பட்டியலின பெண்!!

மிக இளம்வயதிலேயே சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ள காயத்ரி, காரஹள்ளி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் கெங்கல் அனுமந்தய்யா சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார்.

அவர் பல்கலைக்கழக அளவில் 4ஆவது இடத்தை பிடித்து இருந்தார். பட்டியலின வகுப்பை சேர்ந்த காயத்ரி சிவில் நீதிபதியாக தேர்வாகி இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like