மாநிலக்கல்லூரி மாணவர்கள் 25 பேர் பணியிடை நீக்கம்..!

சென்னையில் உள்ள புறநகர் ரெயில் நிலையங்களில் ரூட் தல பிரச்சினை காரணமாக தொடர் மோதல் ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரெயில் நிலையங்களில் மாணவர்களிடையே மோதல் தொடர்பாக 18 வழக்குகள் பதிவு, 44 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல், 3 மாதத்திற்கு முன் மோதலில் ஈடுபட்ட மாநில கல்லூரி மாணவர்கள் 15 பேரும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
சமீபத்திலும் ரூட் தல பிரச்சினை காரணமாக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால், 30 மாணவர்களை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று மாநிலக்கல்லூரி முதல்வருக்கு ரயில்வே போலீசார் கடிதம் எழுதினர். இதன் எதிரொலியால், மாநிலக் கல்லூரி மாணவர்கள் 25 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிக்கு சரியாக வராதவர்கள் என்றும், எப்போதோ ஒரு நாள் கல்லூரிக்க வருபவர்கள் தான் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கல்லூரிக்கு வந்தால் அவர்களை திருத்துவதற்கு தயாராக உள்ளோம் .
இதற்கிடையே மாணவர்கள் பயணிக்கும் பெட்டிகளில் போலீசாரும் உடன் பயணித்து கண்காணிக்கவும், ரெயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் ரயில்வே போலீசார் முடிவு செய்துள்ளனர்.