25 மாணவர்கள் தீயில் கருகி பலியான சோகம்!
தாய்லாந்தில், மத்திய உதாய் தானி மாகாணத்திலிருந்து பாங்காக் நோக்கிப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 44 பேர் பஸ்சில் சுற்றுலா சென்றனர். அப்போது பஸ்சில் திடீரென டயர் வெடித்ததில், தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயில் கருகி, 25 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், சிலர் பலத்த காயமுற்றனர்.
தீப்பற்றியதும் சுதாரித்து கொண்ட, 3 ஆசிரியர்கள் உட்பட சில மாணவர்கள் பஸ்சிலிருந்து வெளியேறியனர். இதனால் அவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். மேலும், சிலரை காணவில்லை அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது என மீட்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீ விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது தெரியவில்லை. ஆனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்தனை செய்கிறேன்’ எனத் தாய்லாந்தின் பிரதமர் பேட்டோங்டர்ன் ஷினவத்ரா சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.நெடுஞ்சாலையில் பஸ் டயர் வெடித்து, தடுப்பு சுவரில் மோதி, தீப்பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.