24 மணி நேரம் !! 3 முறை நிலநடுக்கம் !! அதிர்ச்சியில் மக்கள்

24 மணி நேரம் !! 3 முறை நிலநடுக்கம் !! அதிர்ச்சியில் மக்கள்

24 மணி நேரம் !! 3 முறை நிலநடுக்கம் !! அதிர்ச்சியில் மக்கள்
X

குஜராத்தில் இன்று பிற்பகல் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 3.56 மணிக்கு இந்த நடுக்கம் உணரப்பட்டது. இது கட்சில் உள்ள பாச்சாவிலிருந்து 6 கிலோமீட்டர் வடமேற்கே தாக்கியது.

ரிக்டர் அளவுகோலில் 4.1 எனக் கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் குஜராத்தில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும். இதனால் உடனடி உயிரிழப்புகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இன்று முன்னதாக , ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவிலான நிலநடுக்கம் குஜராத்தை மதியம் 12.57 மணிக்கு தாக்கியது. ராஜ்கோட்டிலிருந்து வடமேற்கே 83 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்சில் இந்த நடுக்கம் உணரப்பட்டது.

இதே போல் நேற்று இரவு 8.13 மணிக்கு குஜராத்தின் ராஜ்கோட்டில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அகமதாபாத் உட்பட மாநிலத்தின் பல பகுதிகள் அதிர்வலைகளை உணர்ந்தன. கட்சில் உள்ள பாச்சாவிற்கு அருகில் உருவானது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

Next Story
Share it