1. Home
  2. தமிழ்நாடு

24 மணி நேரத்திற்கு பிறகு திறக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் கதவுகள்!!

24 மணி நேரத்திற்கு பிறகு திறக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் கதவுகள்!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் கதவுகள் 24 மணி நேரத்திற்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற வளாகத்தின் கதவுகள் அனைத்தும் ஆண்டுக்கொரு முறை ஒரு நாள் முழுவதுமாக மூடப்படுவது வழக்கம். அந்த காலத்தில் ஜார்ஜ் டவுண், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் 107 ஏக்கரில் சென்னை உயர்நீதிமன்றம் கட்டப்பட்டது.

அதனால் அப்பகுதியில் வசித்த மக்கள் உயர்நீதிமன்றத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது. ஆனால் நாளடைவில் மக்கள் சுற்றிச் செல்வதற்கு பதிலாக, உயர்நீதிமன்ற வளாகத்தின் உள்ளே இருக்கும் பாதையை பயன்படுத்தத் தொடங்கினர்.


24 மணி நேரத்திற்கு பிறகு திறக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் கதவுகள்!!


இதை கவனத்தில் கொண்ட உயர்நீதிமன்ற நிர்வாகம், எதிர்காலத்தில் நீதிமன்ற வளாக நடைபாதையை பொதுமக்கள் உரிமை கோரிவிடக்கூடாது என்பதற்காக இப்படி ஒரு வழக்கத்தை கொண்டு வந்தது.

இதன் மூலம் உயர்நீதிமன்றம் தனது உரிமை மற்றும் ஆளுமையை காத்துக் கொள்கிறது. இந்த வழக்கத்தின்படி ஐகோர்ட் வளாகத்தின் அனைத்து கதவுகளும் 24 மணி நேரத்திற்கு முழுவதுமாக மூடப்படும்.

அதாவது நவம்பர் மாதம் ஏதேனும் ஒரு சனிக்கிழமை மூடி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படும். அந்த வகையில் நேற்று இரவு 8 மணிக்கு மூடப்பட்ட வாயில் கதவுகள் இன்று இரவு 8 மணிக்கு திறக்கப்பட்டன.

newstm.in

Trending News

Latest News

You May Like