1. Home
  2. தமிழ்நாடு

2,200 கி.மீ யணம்..! குஜராத்தில் இருந்து பெங்களூரு கொண்டு வரப்பட்ட மயில் இறகுகள்..!

Q

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி, சஷ்டி திதி வரையான 6 நாட்களில் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. முருகன் கோவில்களில் 6வது நாள் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். இந்த கந்த சஷ்டி விரதமானது, முருகனின் ஆறுபடை வீடுகளில் 2ம் வீடான திருச்செந்தூரில் சிறப்பாக நடக்கும். குழந்தை வரம் வேண்டி முருகனை நினைத்து இந்த விரதம் இருந்தால், முருகனே குழந்தையாக பிறப்பார் என்பது ஐதீகம். கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சஷ்டி விழா நான்காம் நாளான இன்று, சுவாமி ஜெயந்திநாதர், மயில் இறகு மாலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபாகரன் என்பவர் ஜெயந்திநாதருக்கும், வள்ளி, தெய்வானை அம்மன்களுக்கும் மயில் இறகுகளால் கோர்க்கப்பட்ட மாலையினை அணிவித்து வழிபட்டார். குஜராத்தில் இருந்து மயில் இறகுகள் விமான மூலம் பெங்களூருக்கு வரவழைக்கப்பட்டு மாலைகளாக்கப்பட்டு விமானம் மூலம் தூத்துக்குடி வந்து அங்கிருந்து திருச்செந்தூருக்கு பிரபாகரன் கொண்டு வந்தார். சுமார் 2200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குஜராத்தில் இருந்து மயில் இறகுகள் கொண்டு வரப்பட்டது குறிபிடத்தக்கது. வரும் 7ம் தேதி முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரமும், 8ம் தேதி திருக்கல்யாணமும் நடப்பதால், இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like