1. Home
  2. தமிழ்நாடு

22 சட்டவிரோத பந்தய செயலிகளுக்கு தடை..!

1

மகாதேவ் பந்தய செயலியை துபாயைச் சேர்ந்த சவுரப் சந்திரகர், முன்னாள் ஜூஸ் விற்பனையாளர் மற்றும் அவரது கூட்டாளி ரவி உப்பல் ஆகியோர் நடத்தி வந்தனர், இருவரும் சத்தீஸ்கரை சேர்ந்தவர்கள்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ்பாகல் மகாதேவ் செயலியின் நிறுவனத்திடம் இருந்து சுமார் 508 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறி இருந்தது.

இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் வெளி்யிட்டுள்ள அறிக்கையில்: பிரிவு தகவல் தொழில் நுட்ப சட்டம் 69ஏ -ன் கீழ் செயலியை முடக்கும் அனைத்து அதிகாரமும் சத்தீஸ்கர் அரசுக்கு உள்ளது. இருப்பினும் அவர்கள் அதனை பயன்படுத்தவில்லை.

இந்நிலையில் அமலாக்கத்துறையின் பரிந்துரையின்படி மகாதேவ் மற்றும் ரெட்டியன்னாபிரெஸ்டோப்ரா உள்ளிட்ட 22 சட்டவிரோத பந்தய செயலிகளுக்கு தடைவிதிக்கப்படுகிறது என மத்திய இணை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.


 

Trending News

Latest News

You May Like