மோடியின் மருமகள் எனக்கூறி ரூ.21 லட்சம் மோசடி!!
பிரதமர் மோடியின் மருமகள் எனக்கூறி ஓய்வுபெற்ற ராணுவ வீரரிடம் பெண் ஒருவர் 21 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உபேந்திர ராகவ் என்பவருக்குப் பல்லியா மாவட்டத்தைச் சேர்ந்த கோமல் பாண்டே என்ற பெண் செல்போன் மூலமாக அறிமுகமானார்.
சிறிது நாட்களுக்கு பிறகு கோமல் பாண்டே, வெராணிகா என்ற பெண்ணை உபேந்திர ராகவிற்கு அறிமுகம் செய்துள்ளார். அப்போது வெராணிகா, தன்னை பிரதமர் மோடியின் மருமகள் என கூறியுள்ளார்.
மேலும், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என அவரை நம்பவைத்துள்ளார். அதை உண்மை என்று உபேந்திர ராகவ் நம்பியுள்ளார்.
பின்னர் அவரை தொடர்பு கொண்ட வெரோணிகா பணத்தை முதலீடு செய்ய ரூ.21 லட்சம் பணத்தைத் தனது நண்பர் ரமேஷ் சர்மா என்பவர் வங்கிக்கு அனுப்பும் படி கூறியுள்ளார்.
இதையடுத்து உபேந்திர ராகவும் அவர் கூறியது போன்றே பணத்தை அனுப்பியுள்ளார். இதையடுத்து முதலீடு செய்த பணம் என்ன ஆனது என கேட்டுள்ளார். அப்போது அவர் ரூ.18 லட்சத்திற்குப் போலியாக ஒரு செக்கை வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியுள்ளார்.
அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த உபேந்திர ராகவ், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in
.png)