1. Home
  2. தமிழ்நாடு

கோவை, திருப்பூரில் தொடங்கியது 20 நாள் ஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டம்..!

1

திருப்பூர், கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 1,000- க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். திருப்பூர், கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களில் இரண்டு லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சர்வதேச அளவில் நிலவும் பதற்றங்கள் காரணமாக, ஏற்கனவே ஜவுளித்துறை பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் உற்பத்தியாளர்கள், தற்போது மின்சாரத்திற்கான மானியத்தை ரத்துச் செய்தது, வங்கதேசம், வியட்நாமில் இருந்து குறைந்த விலையில் துணிகளை இறக்குமதி செய்வது, மற்ற மாநிலங்களில் உள்ள புதிய ஜவுளிக்கொள்கை போன்றவற்றால் தங்கள் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக வருந்துகின்றன.

எனவே, இவற்றுக்கு தீர்வுக்கான வலியுறுத்தி, நேற்று (நவ.05) முதல் 20 நாட்களுக்கு வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளதாகக் கூறுகின்றன. இதன் காரணமாக, இந்த துறைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும், பணிபுரியும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு ஜவுளி உற்பத்திப் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like