1. Home
  2. தமிழ்நாடு

2026 தேர்தல் என்பது எங்களுக்கும், திமுகவுக்கும் நேரடி போட்டியாக இருக்கும் : வி.கே.சசிகலா பரபரப்பு பேட்டி..!

1

தமிழகத்தில் இருக்கும் இருபெரும் காட்சிகளில் ஒன்றான அதிமுகாவை நாடெங்கும் வியந்து பார்க்கும் அளவுக்கு கம்பீர கோட்டையாக மாற்றியவர் எம்.ஜி.ஆர் . அவருக்கு பின் அந்த கட்சியை சிங்கபெண்ணாக வழிநடத்தியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

இதில் ஜெயலலிதா நடிக்கும் காலத்தில் இருந்தே அவரது நெருங்கிய தோழியாக வலம் வந்தவர் வி.கே.சசிகலா . எப்போதும் ஜெயலலிதாவின் நிழலால் போல கூடவே இருந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் சசிகலாவின் ஆதரவாளர்கள் அவரை சின்னம்மா என்று அழைக்க தொடங்கினர். அதன்பின்னர் அதிமுகவுக்குள் ஏரளமான பிரச்சனைகள் வர இன்று அதிமுக பல அணிகளாக பிளவுபட்டு கிடக்கிறது.

எது எப்படி இருந்தாலும் தமிழகத்தில் நடக்கும் பல விஷயங்களுக்கு கருத்து கூறியும் ஆளும் அரசை விமர்சித்தும் , தப்பென்றால் கேள்வி மேல் கேள்வி கேட்டு சசிகலா தனது வேலையை சிறப்பாக செய்து வருகிறார்.

இந்நிலையில் 2026 தேர்தல் என்பது எங்களுக்கும், திமுகவுக்கும் நேரடி போட்டியாக இருக்கும். அந்த தேர்தலில் நான் யார் என்பதைக் காட்டுவேன் என சசிகலா பரபரப்பான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

2026 தேர்தல் என்பது எங்களுக்கும், திமுகவுக்கும் நேரடி போட்டியாக இருக்கும். அந்த தேர்தலில் நான் யார் என்பதைக் காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன்.

மத்தியில் எந்த ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும். இதுவரை ஆட்சி செய்தவர்களில் எந்த ஆட்சி மக்களுக்குப் பயன்பட்டதோ? அந்த கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like