1. Home
  2. தமிழ்நாடு

1901-க்குப் பிறகு இந்தியாவில் மிக வெப்பமான ஆண்டு 2024..!

1

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யஞ்சய் மொஹபத்ரா காணொலி மூலம் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: இந்தியாவில் கடந்த 1901-ம் ஆண்டுக்கு பிறகு 2024-ம் ஆண்டுதான் வெப்பமான ஆண்டாக இருந்தது. கடந்த 123 ஆண்டுகளில் அதிக வெப்பமான ஆண்டாக அமைந்துள்ளது.

2024-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் சராசரியாக தரைக்காற்றின் வெப்பநிலை என்பது நீண்டகால சராசரியைவிட அதிகமாகப் பதிவானது. இது கடந்த 1901 - 2020 காலகட்டத்தில் பதிவானதை விட 0.65 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

இயல்பைவிட கூடுதலாக.. மேலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 2025 ஜனவரியில் இயல்பைவிட கூடுதலாக வெப்பநிலை நிலவும் என்றும் வட மேற்கு, மத்திய மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இந்தியப் பகுதிகள் மற்றும் தென்னிந்தியாவின் மத்திய பகுதிகள் தவிர பெரும்பாலான பகுதிகளில் இயல்பைவிட வெப்பநிலை குறைவாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Trending News

Latest News

You May Like