1. Home
  2. விளையாட்டு

2022- ன் சிறந்த கால்பந்து வீரராக மெஸ்ஸி தேர்வு!

2022- ன் சிறந்த கால்பந்து வீரராக மெஸ்ஸி தேர்வு!

2022- ம் ஆண்டில் கால்பந்தில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த வீரர், வீராங்கனைகளை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு வாக்கெடுப்பு முறையில் தேர்வு செய்துள்ளது. ஃபிஃபா அமைப்பின் 211 உறுப்பு நாடுகளுடன் ரசிகர்களும் ஆன்லைன் முறையில் வாக்களித்தனர்.

இதில் பிரான்சின் எம்பாப்பே, கரிம் பென்சிமா ஆகிய வீரர்கள் இறுதிச் சுற்றில் முறியடித்து, மெஸ்ஸி சிறந்த வீரராகத் தேர்வானார். கடந்த 14 ஆண்டுகளில் மெஸ்ஸி 7-வது முறையாக சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2022- ன் சிறந்த கால்பந்து வீரராக மெஸ்ஸி தேர்வு!

கடந்த ஆண்டு அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பை வென்றதிலும் மெஸ்ஸி முக்கிய பங்காற்றினார். சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருதை அலெக்சியா புட்டல்லாஸ் பெற்றுள்ளார். சிறந்த பயிற்சியாளருக்கான விருதை அர்ஜெண்டினா அணியின் பயிற்சியாளர் லயோனல் ஸ்கலோனி வென்றுள்ளார்.

பாரீஸில் நடைபெற்ற விருது அறிவிப்பு விழாவில், மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Trending News

Latest News

You May Like