1. Home
  2. தமிழ்நாடு

மக்களே இது தெரிஞ்சிக்கோங்க..!! 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய 'பான்' எண் கட்டாயம்..!

மக்களே இது தெரிஞ்சிக்கோங்க..!! 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய 'பான்' எண் கட்டாயம்..!

கடந்த 19-ந் தேதி 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அந்த நோட்டுகள், செப்டம்பர் 30-ந் தேதி வரை செல்லும் என்றும், அதற்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு பிறகு முதல் முறையாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் அறிவிப்பு, நாணய மேலாண்மை நடவடிக்கையின் ஒரு அங்கம்தான். நமது நாணய மேலாண்மை நடவடிக்கை மிகவும் வலுவானது.

சாதாரண காலங்களில்கூட கிழிந்த, எரிந்த, பழுதடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் நடைமுறையை வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன. இதேபோன்ற ஒரு நடவடிக்கை 2013-14-ல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 2005-க்கு முன் அச்சான ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுவதாகவும், எனவே அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், இம்முறை ரூ.2000 நோட்டுகள் திரும்பப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள 4 மாத காலம் அவகாம் இருக்கிறது. எனவே, யாரும் அவசரம் காட்ட வேண்டாம்; வங்கிகளில் குவிய வேண்டாம். செப்டம்பர் 30-க்குப் பிறகும் இந்த நோட்டுக்கள் சட்டப்படி செல்லக்கூடியதாக இருக்கும் (அது எப்படி என்பதை அவர் விவரிக்கவில்லை). இந்த விவகாரத்தில் தெளிவை ஏற்படுத்தவும், மீண்டும் உறுதிப்படுத்தவுமே இதைத் தெரிவிக்கிறோம்.

இதற்கு முன் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் குறித்த அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் தங்களின் பணத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் பூர்த்தியாகிவிட்டது.

கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பின்போது வாபஸ் பெறப்பட்ட நோட்டுகளை ஈடுகட்டவே 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மொத்த கரன்சி புழக்கத்தில் 2,000 ரூபாய் நோட்டுகளின் பங்களிப்பு, வெறும் 10.8 சதவீதம்தான்.

மேலும் அவர் கூறுகையில் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தால், வருமானவரி தேவைக்காக 'பான்' எண்ணை குறிப்பிடுவது நடைமுறையில் இருக்கிறது. 2,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி, ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்வதற்கும் அது பொருந்தும் என தெரிவித்தார்.


Trending News

Latest News

You May Like