பெட்ரோல் பங்கில் ரூ.2,000 நோட்டுகள் செல்லுமா ?வெளியான முக்கிய தகவல்..!
புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக கடந்த வாரம் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதைத்தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பாக வங்கிகளுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டுகள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும் என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. பெட்ரோல் பங்க்களில் சில்லறை தட்டுபாடு ஏற்படாமல் இருக்க வங்கிகள் தடையின்றி ரூ.2000 நோட்டுகளுக்கு சில்லறை வழங்கிட வேண்டும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.