1. Home
  2. தமிழ்நாடு

நாடு முழுவதும் இன்று விவசாயிகள் கணக்கில் 2000 ரூபாய்..!!

நாடு முழுவதும் இன்று விவசாயிகள் கணக்கில் 2000 ரூபாய்..!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.. ரூ. 6000 தொகை வருடத்தில் மூன்று தவணையாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 13-வது தவணையாக ரூ. 2000, 8 கோடி விவசாயிகளுக்கு இன்று வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

பிரதம மந்திரி கிஷான் யோஜனா திட்டத்தின் மூலம் வருடம் முழுவதும் சுமார் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர். 1.12.2018 ஆம் நாள் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது வரை 12 தவணைகளில் விவசாயிகளுக்கு ரூ. 2000 உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வங்கி கணக்கிற்கு ரூ. 6000 மூன்று தவணை முறையாக செலுத்தப்படும். தற்போது 13-வது தவணை தொகைக்காக விவசாயிகள் காத்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி மாலை 3 மணிக்கு விவசாயிகளுக்கு உதவித்தொகை பணத்தைச் செலுத்தும் பணியைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

Trending News

Latest News

You May Like