1. Home
  2. தமிழ்நாடு

2000 ரூபாய் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நச்” விமர்சனம்!!

2000 ரூபாய் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நச்” விமர்சனம்!!

2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறு வரிகளில் நச் என்று விமர்சித்துள்ளார்.

புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என்று நேற்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. வரும் 23ஆம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து வரவு வைத்துக் கொள்ளலாம் என்றும், ஒரு நாளைக்கு ஒரு நபர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


2000 ரூபாய் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நச்” விமர்சனம்!!

கடந்த 2018-2019 ஆம் ஆண்டு முதல் 2 ஆயிரம் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது. கிளீன் நோட் பாலிசி அடிப்படையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இனி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடாது என ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், 500 சந்தேகங்கள் 1000 மர்மங்கள் 2000 பிழைகள்! கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்! என்று டுவீட் செய்துள்ளார்.


newstm.in

Trending News

Latest News

You May Like