20 லட்சத்துக்கு உடல் உறுப்புகள் விற்பனை! வில்லங்க விளம்பரத்தோட அதிர வைத்த இளம்பெண்!

கேரளா, கொச்சினில் வசித்து வருபவர் சாந்தி. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் சாந்திக்கு 4 மகன்கள். கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், காலி செய்து விட்டு கொச்சினில், சாலையோரத்தில் கூடாரம் அமைத்து வசித்து வருகிறார்.
கொரோனா இவர்களது வாழ்க்கையை அடியோடு மாற்றி சூறாவளியாய் சுழற்றியடித்திருக்கிறது. மூத்த மகனுக்கு, சாலை விபத்து ஏற்பட்டு மூளை அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. இளையமகனுக்கு அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த கட்டி அகற்றப்பட்டுள்ளது. சாந்திக்கும் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் செய்து வந்த வேலை போய்விட்டது.
வாழ்வதற்கே வருமானம் இல்லாமல் தவித்து வந்த இந்த குடும்பத்தை, ஒரு பக்கம் கொரோனா துரத்த, இன்னொரு புறம் கடன்காரர்கள் நெருக்கடி கொடுப்த்திருக்கிறார்கள். எப்படி பார்த்தாலும் மகன்களின் மருத்துவ செலவு, கடன்காரர்களின் தொல்லை என்று கையில் 20 லட்சம் இருந்தால் தான் பிரச்சனைகளை சமாளிக்க முடியும் என்று நினைத்த சாந்தி விபரீதமான முடிவொன்றை எடுத்தார்.
தனது உடலின் மதிப்பு மிக்க உறுப்புகளான இதயம், கல்லீரல், கிட்னி என்று விற்பனை செய்வதற்கு முடிவெடுத்து, தான் வசிக்கும் இடத்தினருகே இது குறித்து ஒரு பலகையில் எழுதியும் விளம்பரம் செய்து வைத்தார். இந்த விளம்பரம் பரபரப்பாக சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு, சில தன்னார்வ அமைப்புகளின் சாந்திக்கு உதவ முன்வந்தனர். கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கேகே ஷைலஜா, சாந்தியின் மகன்களின் மருத்துவ செலவுகளை அரசு கவனித்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். தற்போது சாந்தியின் குடும்பத்திற்கு அரசின் உதவியுடன் நிரந்தர வீடு கிடைப்பதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன.
newstm.in