1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! 20 வார விடுமுறை 2 வாரமாக குறைப்பு!!

அதிர்ச்சி! 20 வார விடுமுறை 2 வாரமாக குறைப்பு!!

ட்விட்டர் பணியாளர்களுக்கு பேரன்டல் லீவ் (Parental Leave) எனப்படும் பெற்றோர் விடுப்பு 140 நாட்களில் இருந்து 14 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

நன்றாக சென்றுகொண்டிருந்த ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி நாசம் செய்து வருவதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இனி ட்விட்டரில் 'ப்ளூடிக்' பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார்.

அவரின் இந்த அறிவிப்புக்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுதவிர , ட்விட்டர் நிறுவனத்தில் 12 மணி நேரம் வரை வேலை செய்யவேண்டும், அலுவலத்தில் வழங்கப்பட்டு வந்த உணவு நிறுத்தம் என பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தினார்.


அதிர்ச்சி! 20 வார விடுமுறை 2 வாரமாக குறைப்பு!!

இந்நிலையில், ட்விட்டர் பணியாளர்களின் பெற்றோர் விடுப்பை (Parental Leave) 14 நாள்களாகக் குறைத்து எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 20 வாரமாக இருந்த ( 140 நாள்கள் ) பெற்றோர் விடுப்பு (Parental Leave) தற்போது 2 வாரமாக (14 நாள்கள் )குறைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தொழிலாளர்களின் சலுகைகளை பறித்து வரும் எலான் மஸ்க் தற்போது பெற்றோர் விடுப்பையும் குறைத்துள்ளதை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like