1. Home
  2. தமிழ்நாடு

மாணவர்களே ரெடியா !! நாளை 'நீட்' தேர்வு.. 20 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதுகின்றனர்..!

மாணவர்களே ரெடியா !! நாளை 'நீட்' தேர்வு.. 20 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதுகின்றனர்..!

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித்தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது.

இந்நிலையில், இளங்கலை மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் தமிழகத்தில் சுமார் 1.5 லட்சம் மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 'நீட்' தேர்வு ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.

'நீட்' தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதை விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like