1. Home
  2. தமிழ்நாடு

20 வயது இளம் நடிகை தற்கொலை!!

20 வயது இளம் நடிகை தற்கொலை!!

20 வயதே ஆகும் இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த சீரியல் நடிகை துனிஷா ஷர்மா (20), மகாராஷ்டிரா மாநிலத்தில் தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பு தளத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேக்கப் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


20 வயது இளம் நடிகை தற்கொலை!!


கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு தளத்தில் துனிஷா டென்ஷனாக இருந்ததாக கூறப்படுகிறது. ஐந்து மணி நேரத்திற்கு முன்பு, செட்டில் மேக்கப் செய்து கொள்ளும் வீடியோவை துனிஷா பகிர்ந்திருந்தார். 'ஃபிதூர்' மற்றும் 'பார் பார் தேக்கோ' ஆகிய இரண்டு படங்களிலும் இளம் கத்ரீனா கைஃப் கதாபாத்திரத்தில் துனிஷா நடித்திருந்தார்.

நடிகையின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


newstm.in

Trending News

Latest News

You May Like