1. Home
  2. விளையாட்டு

டி20 உலகக்கோப்பையை வென்றது இங்கிலாந்து!!


டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. பாகிஸ்தான் வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. 15 ரன்கள் எடுத்த நிலையில் ரிஸ்வான் சாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்நது களமிறங்கிய முகமது ஹாரிஸ் ஆதில் ரஷீத் பந்துவீச்சில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஷான் மசூத் அதிரடி காட்டினார். மறுபுறம் நிலைத்து ஆடி ரன்கள் குவித்த பாபர் அசாம் 32 ரன்களில் வெளியேறினார். பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137ரன்கள் எடுத்தது.


டி20 உலகக்கோப்பையை வென்றது இங்கிலாந்து!!


138 ரன்கள் எடுத்தால் கோப்பையை வெல்லலாம் என்ற நிலையில் இங்கிலாந்து அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினர். ஷஹீன் ஷா அப்ரிடி வீசிய முதல் ஓவரில் ஹேல்ஸ் வெளியேறினார்.

பட்லர் 32 ரன்களுக்கு ஹாரிஸ் ரவுப் பந்துவீச்சில் வெளியேறினார். பின்னர் பென் ஸ்டோக்ஸ், ஹார்ரி புரூக் இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் சேர்த்தனர். புரூக் 20 ரன்களில் ஷதாப் கான் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.




ஸ்டோக்ஸ், மொயீன் அலி இருவரும் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணியை வெற்றி நோக்கி அழைத்து சென்றனர். சிறப்பாக விளையாடிய ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்தார். இறுதியில் 19 ஓவர்களில் 5விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பையை வென்றது. இது அந்த அணி வெல்லும் 2வது டி20 உலகக்கோப்பை இது. அதே போல் 50 ஓவரிலும் இங்கிலாந்து அணிதான் கோப்பையை வைத்திருக்கிறது என்பது நினைவுக்கூரத்தக்கது.


newstm.in

Trending News

Latest News

You May Like