20 கிமீ தூரம் போலீஸை இழுத்துச் சென்ற கார்!!
கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் போலீஸை 20 கிலோ மீட்டர் தூராம் காரில் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்க்கர் மாவட்டத்தில் உள்ள பீம்பீச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், போலீஸார் பணி மேற்கொண்டு வந்தனர். அப்போது, விதிகளை மீறி காரை ஒன்று வேகமாக வந்துள்ளது.
இதையடுத்து போக்குவரத்து காவலர் மோகன் மாலி (37) அந்த காரை மடக்கிப் பிடித்து நிறுத்தினார். ஆனாலும், அந்த வேகமாக செல்ல முயன்றது. அப்போது அந்த காவலர் காரின் முன்பகுதியை தாவி பிடித்தார்.
போலீஸ் பானெட்டை பிடித்திருந்ததையும் கண்டுக்கொள்ளாமல் கார் வேகமாகச் சென்றது. கார் வேகமாக சென்று கொண்டிருந்தாலும், போக்குவரத்து காவலர் மோகன் மாலி காரின் பானெட்டை விடவில்லை.
இதனிடையே கார் வேகமாக செல்வது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் கார் 20 கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகு, போலீஸார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், ஆதித்யா தோண்டிராம் பெப்பேடே (37) என்பவர் கஞ்சா போதையில் காரை ஓட்டியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலிஸார், அவர் மீது கொலை முயற்சி, ஆபத்து விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
newstm.in