1. Home
  2. தமிழ்நாடு

2 மடங்கு உயரப்போகுது ஆட்டோ கட்டணம்.. வெளியானது அதிர்ச்சி தகவல்..!

2 மடங்கு உயரப்போகுது ஆட்டோ கட்டணம்.. வெளியானது அதிர்ச்சி தகவல்..!

ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணத்தை 50 ரூபாயாக உயர்த்த வேண்டும் என மனிதநேய தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மனிதநேய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் அ.சாதிக் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணமாக 25 ரூபாயும், கிலோ மீட்டருக்கு 12 ரூபாயும் தமிழக அரசின் சார்பில் 2013-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது.


அப்போதைய பெட்ரோல் விலை ரூ.60.50. ஆனால், தற்போது பெட்ரோல் விலை ரூ100.19 ஆக உயர்ந்துள்ளது. ஆட்டோவை ஆண்டுதோறும் புதுப்பிக்கும் எஃப்சி கட்டணம் 2013-ல் 225 ரூபாயாக இருந்தது. இன்று 625 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அரசு போக்குவரத்துக்கழக பேருந்து கட்டணம்கூட 2013-க்கு பின்னர் 2 முறை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு, குறைந்தபட்ச கட்டணத்தை 50 ரூபாயாகவும், கிலோ மீட்டர் ஒன்றுக்கு 25 ரூபாயாகவும் உயர்த்தி தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like