1. Home
  2. தமிழ்நாடு

2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் ரயில் ஓட்டுநர் பலி..!!

2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் ரயில் ஓட்டுநர் பலி..!!

மத்தியப் பிரதேச மாநிலம், ஷாதோல் மாவட்டத்தில் உள்ள சிங்கூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்றின் மீது, அதே வழியில் வந்த மற்றொரு சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயில் எஞ்சின்கள் தடம்புரண்டு தீப்பிடித்தன. நேற்று காலை 6.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் சரக்கு ரயிலின் ஓட்டுநர் ஒருவர் பலியானார். மேலும் ஒரு ஓட்டுநர் உள்ளட்ட 3 ரயில்வே ஊழியர்கள் காயமைடைந்தனர்.

சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாகவும், மீட்பு பணிகள் விரைவாக நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தினால் பிலாஷ்புர் - கட்னி இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சில ரயில்கள் வேறு மார்க்கமாக திருப்பி விடப்பட்டுள்ளன, சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News

Latest News

You May Like