1. Home
  2. தமிழ்நாடு

2 வயது குழந்தை அடித்து கொலை.. தாய் மீதான கோபத்தில் சித்தப்பா வெறிச்செயல் !

2 வயது குழந்தை அடித்து கொலை.. தாய் மீதான கோபத்தில் சித்தப்பா வெறிச்செயல் !


சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகரில் அரிகிருஷ்ணன் (32) - பாக்கியலட்சுமி (26) தம்பதி வசித்து வருகின்றனர். இத்தம்பதிக்கு பிரகாஷ்ராஜ் (5) கோகுல்ராஜ் (2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். பாக்கியலட்சுமியின் தங்கை பவானி (20) அருண்குமார்( 22) என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி அருண்குமார், தனது மனைவி பவானியுடன் ஆவடியில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினார். அங்கு தனது தங்கையை பார்க்க பாக்கியலட்சுமியின் 2வது மகன் கோகுல்ராஜை அழைத்துக்கொண்டு சென்று அங்கு விட்டுள்ளார்.

இதனிடை கடந்த செப்டம்பரில் சிறுவன் கோகுல்ராஜ் வீட்டு படிக்கட்டில் இருந்து விழுந்து தலையில் காயம் பட்டதாக கூறி எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

2 வயது குழந்தை அடித்து கொலை.. தாய் மீதான கோபத்தில் சித்தப்பா வெறிச்செயல் !

இதனையடுத்து, சந்தேகமடைந்த பாக்கியலட்சுமி ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில், அருண்குமார், பவானியை காதலித்து திருமணம் செய்வதற்கு ஆரம்பத்தில் பாக்கியலட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அருண்குமாருக்கும், பாக்கியலட்சுமிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதனை மனதில் வைத்து கொண்டு சம்பவத்தன்று அருண்குமார் வேலை முடிந்து குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கோகுல்ராஜை கரண்டியால் சரமாரியாக அடித்தது தெரியவந்தது. இதனால் சிறுவன் காயமடைந்தான்.

2 வயது குழந்தை அடித்து கொலை.. தாய் மீதான கோபத்தில் சித்தப்பா வெறிச்செயல் !

இதனையடுத்து, இந்த வழக்கில் ஏற்கனவே போலீசார் அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து, போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.

newstm.in


Trending News

Latest News

You May Like